TN +1 தேர்வு முடிவுகள் வெளியீடு..... 96.04% மாணவ, மாணவிகள் தேர்ச்சி!!
பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு... 96.04% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்..!
பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு... 96.04% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்..!
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது. பிளஸ் 1 தேர்வில் 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. அதில், +2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 16 ஆம் தேதி வெளியானது. இதையடுத்து, 8,32,475 பேர் எழுதிய +1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 2020 +1 பொதுத்தேர்வு மற்றும் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற +2 மறுதேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் +1 பொதுத்தேர்வில் 96.04 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 1 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 94.38 சதவீதமாக உள்ளது. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 97.49 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை விட 3.11 சதவீதம் அதிக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடவாரியான தேர்ச்சி விகிதம்....
இயற்பியல் - 96.68 சதவீதம், வேதியியல் - 99.95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி.
உயிரியல் - 97.64 சதவீதம், கணிதம் - 98.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி.
தாவரவியல் - 93.78 சதவீதம், விலங்கியல் - 94.53 சதவீதம் பேர் தேர்ச்சி.
கணினி அறிவியல் - 99.25 சதவீதம், வணிகவியல் - 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி.
கணக்குப் பதிவியியல் - 98.16 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி.
ALSO READ | 7th Pay Commission: 10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ 62,000 சம்பளத்தில் வேலை!
அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கோவை முதலிடம் - 98.10 %; விருதுநகர் 2வது இடம் - 97.90 %; கரூர் 3வது இடம் - 97.51 %. +1 தேர்வில் 88.68 விழுக்காடு தேர்ச்சியுடன் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது. 2716 பள்ளிகளில் +1 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம் மற்றும் ஆண்டு போன்றவற்றை பதிவு செய்து, தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு துறையின், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில், தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, அவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.